தமிழ் பொது வேட்பாளர் விடயமானது சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் இருப்பை காட்டுகின்ற ஒரு முயற்சி என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அணியின் முக்கிய பெண் பிரமுகரான உமாச்சந்திரா பிரகாஷ் (Umachandra Prakash) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்கள் தமது வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கே அளிக்கலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்களின் ஒரு அடையாளம்.
பொது வேட்பாளர்
இதனடிப்படையில், அந்த பொது வேட்பாளரை தெரிவு செய்யும் உங்களது உரிமைக்கு நாங்கள் மதிப்பளிப்பது அதனை கௌரவப்படுத்துகின்றோம்.
நாட்டினுடைய புதிய மாற்றத்திற்காக உங்களது இரண்டாவது வாக்கினை சஜித் பிரேமதாசவிற்கு அளியுங்கள்.
அத்தோடு, நம்முடைய நாட்டில் பெண்களுக்கான அரசியல் அங்கிகாரமானது கேள்விக்குரிய விடயமாகவுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/qceLd7ILxbY?start=595