Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

0

Courtesy: Kanagasooriyan Kavitharan

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் – வான் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (29) கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் இடம்பெற்றுள்ளது.

35 வயது

இந்த விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே உயிரிழந்துள்ளார் .

இவர் தொழில் நிமிர்த்தம் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த வான் பாதை மாறி குறித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இம்பெற்றுள்ளது.

வானின் சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் கரடியனாறு பொலிஸார் வானின் சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Source: https://tamilwin.com/article/one-killed-in-motorcycle-accident-in-batticaloa-1719724603

NO COMMENTS

Exit mobile version