Home இலங்கை அரசியல் ரணில் மற்றும் சஜித் பிரேமதாச இணைவதினை குழப்பும் முக்கிய தலைவர்

ரணில் மற்றும் சஜித் பிரேமதாச இணைவதினை குழப்பும் முக்கிய தலைவர்

0

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும், சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதினை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் குழப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பிற்கும் இடையில் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டதன் பின்னர் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

 

உயர்மட்ட பேச்சுவார்த்தை

இரு கட்சிகளும் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட முடியும் என தாம் கருதியதாக தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்டதன் பின்னர் முரண்பாட்டு நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

கட்சியின் தலைமைப் பொறுப்பினை ருவான் விஜேவர்தனவிற்கும் சிரேஸ்ட தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கும் தமது தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த யோசனைக்கு கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க இணங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

 

NO COMMENTS

Exit mobile version