Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொடும் தங்க விலை – இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொடும் தங்க விலை – இன்று பதிவாகியுள்ள நிலவரம்

0

இலங்கையில் இன்றைய தினமும் (16.06.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் 24 கரட் தங்க பவுண் ஒன்று 2000 ரூபாயால் அதிகரித்துள்ளது. 

அதன்படி 24 கரட் தங்க பவுண் ஒன்று 394,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்க பவுண் ஒன்று 4000 ரூபாயால் அதிகரித்து 362,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நான்கு இலட்சம் ரூபாவை தொட்டிருந்த 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது அண்மைய சில நாட்களாக வீழ்ச்சிப் போக்கினை காட்டியிருந்தது.

இவ்வாறான சூழலில் தற்போது மீண்டும் உயர்வு போக்குடன் நான்கு இலட்சம் ரூபாவை மிகவும் நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/one-pawn-gold-rate-in-sri-lanka-1781593163

NO COMMENTS

Exit mobile version