Home முக்கியச் செய்திகள் யாழில் அர்ச்சுனா எம்.பியால் படுகாயமடைந்த நபருக்கு அறுவை சிகிச்சை

யாழில் அர்ச்சுனா எம்.பியால் படுகாயமடைந்த நபருக்கு அறுவை சிகிச்சை

0

யாழ்ப்பாணத்தில்(Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) உள்ளிட்ட இருவருக்கிடையில் நடந்த கைகலப்பில் படுகாயம் அடைந்த
நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

முதலாம் இணைப்பு

யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவருக்கிடையில் நடந்த கைகலப்பில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்
அர்ச்சுனா அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம்

இதன்போது, அங்கு நின்ற நபர்
தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்துள்ளார். எனினும், அர்ச்சுனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில், அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகள் – கஜிந்தன் 

https://www.youtube.com/embed/oDQLHWglfG4https://www.youtube.com/embed/rMAUDossrZk

NO COMMENTS

Exit mobile version