முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய மூன்று வாகனங்களில் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு திருப்பி அனுப்புமாறு எழுத்துபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு(நேற்று) முன்னர் வாகனத்தை திருப்பித் தருமாறு கோரி ஜனாதிபதி செயலாளர் நந்திக குமநாயக்க ஏப்ரல் 19 ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவித்தல்
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க,(chandrika kumaratunga) மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa), மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena), கோட்டாபய ராஜபக்ச(gotapaya rajapaksa)மற்றும் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) ஆகியோருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
