Home முக்கியச் செய்திகள் தீபாவளியை கொண்டாடாத கிராமம்

தீபாவளியை கொண்டாடாத கிராமம்

0

தீபாவளி பண்டிகை இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகின்ற நிலையில், ஒரு கிராமம் மாத்திரம் துக்க நாளாக அனுஷ்டிக்கின்றமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திலுள்ள ராவன்வாடா என்ற பழங்குடியின கிராமமே இவ்வாறு தீபாவளி பண்டிகையை துக்க நாளாக அனுஷ்டிக்கின்றது.

தீபாவளி பண்டிகையானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு, பலகாரம், புத்தாடை என்பவற்றுடன் கொண்டாடும் தினமாகும்.

துக்க தினமாக அனுஷ்டிக்க காரணம்

எனினும், குறித்த கிராமத்திலுள்ள பழங்குடியின மக்கள் தசராவுக்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் துக்கம் அனுசரிப்பதால் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என கூறுகின்றனர்.

அதாவது புராணங்களின்படி, ராமர் சீதையை மீட்க ராவணனை வதம் செய்த பண்டிகை தான் தசரா எனப்படுகிறது.

ராமர், ராவணனை வதம் செய்து தன் மனைவியான சீதையை மீட்ட நிகழ்வின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது.

இருப்பினும் அந்த கிராமத்தில் மட்டும் இந்த வழக்கம் பின்பற்றபடாததுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றது.

கிராம மக்களின் நம்பிக்கை

இது குறித்து அகில இந்திய பழங்குடியினர் மேம்பாட்டு கவுன்சில் மாவட்ட தலைவர் மகேஷ் சாரதி கூறியதாவது, “ராவணன் இறந்ததை, பழங்குடியினர் துக்கமாக அனுசரிக்கின்றனர்.

மேலும் ராவணனும், மேகநாதரும் தங்களை பேரழிவுகளில் இருந்து காப்பதாக அந்த கிராம மக்கள் நம்புகின்றனர்.” என தெரிவித்தள்ளார்.

அத்துடன், ராவன்வாடா கிராமத்தில் மலை உச்சியில் ராவணன் கோயில் உள்ளது.

தசராவையொட்டி, நாடு முழுவதும் தீமையை வென்றதன் அடையாளமாக ராவணன் உருவபொம்மை எரிக்கப்படும்போது, ​​​​இங்கே ராவணனை வணங்கி நீண்ட துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version