Home இலங்கை சமூகம் நிகழ்நிலையில் வாக்குச் சீட்டு: ஆணைக்குழு அறிமுகப்படுத்திய புதிய அம்சம்

நிகழ்நிலையில் வாக்குச் சீட்டு: ஆணைக்குழு அறிமுகப்படுத்திய புதிய அம்சம்

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்கு சீட்டுக்களை அணுகும் வகையில் நிகழ்நிலை (Online) முறையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை நிகழ்நிலை பதிவின் (Online Registration) பார்வையிட முடியும்.

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் சரியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும் என்றும் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

வாக்குப் பதிவு

மேலும், இதுவரை தங்களின் வாக்குச் சீட்டுக்களை தபால் மூலம் பெறாத வாக்காளர்கள், தங்கள் வாக்குச் சீட்டுக்களை சரிபார்க்க, உள்ளூர் தபால் நிலையங்களுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குரிமை உள்ளவர்கள் தங்களது வாக்கினை தவறாது வாக்குச் சாவடிகளில் பதிவிடுமாறு தேர்தல் ஆணைக்குழு தொடர் அறிவிப்புகளை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version