Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் நடைமுறையில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வேட்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று (12) நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்தார்.

வாக்களிக்கத் தகுதி

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இம்முறை தேர்தல்களை கண்காணிப்பதற்காக சுமார் 6,000 பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெப்ஃரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/silence-period-begins-ahead-of-parliament-election-1731382243

NO COMMENTS

Exit mobile version