சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பயணப் பாதையை மாற்ற முற்பட்டால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம்தான்
உருவாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது “ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னதாக அரசமைப்பில் உள்ள ஏற்பாட்டுக்கமைய அதிபர் தேர்தல் நடத்தப்படும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை யாரும் உரிமை கோர முடியாது! வலியுறுத்தும் எம்.பி
அதிபர் தேர்தல்
மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது போல்
நிராகரிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. அதிபர் தேர்தலுக்குப்
பின்னர் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் அதனைச் செய்யலாம்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால், அதிபர் தேர்தலை
எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தக்கூடாது.
ஏனெனில் வீழ்ந்த நாட்டை மீட்டெடுத்துவரும் ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
ஈரானுடனான இலங்கையின் நட்புறவு தொடர வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி
வங்குரோத்து அடைந்த சிறிலங்கா
உலகில் நாடொன்று வங்குரோத்தடைந்தால் மீண்டுவர
8 முதல் 10 ஆண்டுகள்வரை செல்லும். எனினும், குறுகிய காலப்பகுதிக்குள்
வங்குரோத்து அடைந்த எமது நாட்டை சீரான நிலைக்கு அதிபர் கொண்டு வந்துள்ளார்.
மே நடுப்பகுதியளவில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக மீண்ட
பின்னர் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் மீள
ஆரம்பிக்கப்படும்.
தற்போது எமக்கு வேறு வழியில்லை. ஒரே வழிதான் உள்ளது. அந்த வழியை
மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்றினால் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும்.” என்றார்.
தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : பசிலுக்கு பிடிக்கும், நாமலுக்கு பிடிக்காது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |