கைது செய்யப்பட்ட ‘OnmaxDT’ நிதி மோசடியின் பிரதான சந்தேகநபரான கயான் விக்ரமதிலக, நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பிரமிட் திட்டங்களை நடத்தி வருவதாகக் கூறப்படும் OnmaxDT என்ற கணினி தரவுத்தளத்தை இயக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே கயான் விக்ரமதிலக கைதாகியுள்ளார்.
சந்தேக நபரான இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் துபாயில் வைத்துக் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
