சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியம் இலங்கைக்கு கொள்கை அடிப்படையிலான கடனாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணங்கியுள்ளது.
நாட்டின் விரிவான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு நிதியளிப்பதற்காக ஒபெக் நிதியத்திடம் அரசாங்கம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விரிவாக்கப்பட்ட நிதி
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் அளவுருக்களுக்கு இணங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்கமைய, கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.