Home இலங்கை சமூகம் யாழ். மருதங்கேணியில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்துவைப்பு

யாழ். மருதங்கேணியில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்துவைப்பு

0

யாழ்ப்பாணம்(Jaffna) – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் புதிதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியகத்தின் திறப்பு விழாவானது இன்று (18.06.2024) இடம்பெற்றுள்ளது.

திறப்பு விழா

மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் கண்காணிப்பாளர் M.w சந்தனகமகே (M.w santhanagamake) கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு
பணியகத்தை திறந்து வைத்துள்ளார்.

அத்துடன், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கின்
வலிக்கண்டி முதல் குடாரப்பு வரையான 8 கிராம சேவகர் பிரிவுகளும் சில
மாதங்களுக்கு முன்னர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த கிராம சேவகர் பிரிவுகள் வழமை போன்று பருத்தித்துறை நீதிமன்றத்துடன்
இணைக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு
தற்போது பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் அச்சுவேலி, தெல்லிப்பளை, வல்வெட்டித்துறை, இளவாலை, நெல்லியடி
பொலிஸ் பொறுப்பதிகாரிகள், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு
சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன், பொலிஸ் பாதுகாப்பு குழுவினர் வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலாளர்,கிராம சேவகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/opening-of-child-abuse-prevention-bureau-jaffna-1718720081

NO COMMENTS

Exit mobile version