Home இலங்கை சமூகம் வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் திறப்பு

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் திறப்பு

0

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் கிளிநொச்சியில்
சம்பிரதாயபூர்வமாக இன்று (12.12.2024) திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த மாகாண காணி
ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட கட்டிடம்
சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம், வடக்கு மாகாண பிரதம செயலாளர்
உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

மக்கள் சேவைகள்

ஜனவரி 03ஆம் திகதி முதல் கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து மக்கள் சேவைகளை
பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

75 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version