Home இலங்கை சமூகம் மக்கள் அவதானம் – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

மக்கள் அவதானம் – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

0

மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக,
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று (27) அதிகாலை முதல்
திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் மழை மேலும் அதிகரித்தால், மீதமுள்ள வான்கதவுகளும்
திறக்கப்படக்கூடும் என்பதால், அணையின் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவை அண்டிய
பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு
அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும்
குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்

இதேவேளை, மேல் கொத்மலை அணைக்கு கீழே அமைந்துள்ள காமினி,திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டத்தை நெருங்கியுள்ளதால், அதன்
வான்கதவுகள் தானாகவே திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய, நுகாவெல ஆற்றங்கரை, மாவத்துரை, மகாவலிகங்கை,உலப்பனே, கம்பளை, பெரலிய, வெலியியல், கட்டுகஸ்தோட்டை,  பொல்கொல்ல உள்ளிட்ட கொத்மலை ஓயா கீழ்பகுதிகளிலுள்ள குடியிருப்போர்
முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு, நீர்த்தேக்க பொறுப்புப் பொறியலாளர் ஏ.எம்.ஏ.
கே. செனவிரத்ன விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version