Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை

0

ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கணிசமான அளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவிடம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடிப்படை உரிமை மனுக்கள்

ஜனாதிபதித் தேர்தல், காலம் தாழ்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இது குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளனர்.

இவ்வாறான ஓர் கடிதம் கிடைக்கப் பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி கடந்த இரண்டு வார காலப் பகுதியில் இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னணியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version