Home இலங்கை அரசியல் சர்வதேச நாணய பிரதிநிதிகளை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்

சர்வதேச நாணய பிரதிநிதிகளை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்

0

Courtesy: Sivaa Mayuri

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கையின் பொருளாதார மீட்சி முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்தித்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் கீழ் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாசைகளை பிரதிபலிக்கும் ஒன்றாக மாற்றுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது புதிய பொது ஆணையின் கீழ் ஆட்சி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில், முக்கிய உறுப்பினர்களான ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஹர்சன ராஜகருணா, எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரகுமான், காவிந்த ஜயவர்தன ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பொருளாதார கொள்கை

பேராசிரியர் கென்னடி குணவர்தன மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசன்ன பெரேரா உட்பட சிரேஸ்ட கல்வியாளர்களும் பங்களிப்புகளை வழங்கினர்.

அவர்கள் பொருளாதார கொள்கை பற்றிய நுண்ணறிவுகளை இந்த சந்திப்பின்போது பகிர்ந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version