Home இலங்கை அரசியல் இறைத்தூதர் போதித்த தர்மம் நமது சமூகத்தை நாகரீகமாக்க போதுமானது : சஜித்தின் வாழ்த்து செய்தி

இறைத்தூதர் போதித்த தர்மம் நமது சமூகத்தை நாகரீகமாக்க போதுமானது : சஜித்தின் வாழ்த்து செய்தி

0

இயேசு நாதர் போதித்த அமைதி, அன்பு, கருணை, சகவாழ்வு, இரக்கம் ஆகியவை இன்றைய நமது சமூகத்தை நாகரீகமாக்க போதுமானதாக இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவினால் இன்று (25.12.2024) வெளியிடப்பட்டுள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முழுமையான வாழ்த்து செய்தி பின்வருமாறு, “அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மையப்படுத்திய நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் மத விழா மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் அனைத்து இனம், மதம், கட்சி, நிறம், இளையோர், முதியோர் என பாகுபாடின்றி கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகவும் உள்ளது.

நத்தார் பண்டிகை

இதன் அர்த்தத்தை சரியாக புரிந்துகொண்டு நாமும் ஒரு நாடாக முன்னேற வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்த தருணத்தில் நமது நாடு எதிர்கொள்ளும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமெனில் நாமும் இனம், மதம், வர்க்கம், கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன், நல்லிணக்கத்துடன், அன்புடன் செயல்பட வேண்டும்.

இது நாட்டின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போது அடுத்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு வீட்டிலும் எதிர்பார்ப்பு விளக்குகளுக்கு பதிலாக முன்னேற்றத்தின் விளக்குகள் ஒளிரும்.

இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியான இனிய நத்தார் வாழ்த்துக்களை ”மனமார வாழ்த்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version