ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச 2025ஆம் ஆண்டுக்கான தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிற உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் சொத்து, பொறுப்பு சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் , பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
