Home இலங்கை அரசியல் அனர்த்தம் ஏற்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும்

அனர்த்தம் ஏற்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும்

0

 அனர்த்தம் ஏற்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

புயல் தாக்கம் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்ல எதிர்க்கட்சியினருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 12ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் இந்த தகவல்களை எதிர்க்கட்சியினர் மூடிமறைத்துள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான பாரிய அனர்த்தம் நிகழும் வரையில் உண்மைகளை வெளிப்படுத்தாதிருந்தமைக்காக எதிர்க்கட்சிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியும் மக்களின் வாக்குகளைக் கொண்டு தெரிவாகியுள்ளது எனவும் இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் கடப்பாடு எதிர்க்கட்சிக்கும் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு காலநிலை அனர்த்தம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான தகவல்கள் எதிர்க்கட்சியினருக்கு கிடைக்கப் பெற்றிருந்தால் அது குறித்து மக்களுக்கு அம்பலப்படுத்தியிருக்க வேண்டுமென மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version