Home இலங்கை அரசியல் அதிகாரத்தை பெற ஆகக்கூடுதலான பொய் சொன்னவர்கள் எதிர்க்கட்சியினரே! ரில்வின் சில்வா

அதிகாரத்தை பெற ஆகக்கூடுதலான பொய் சொன்னவர்கள் எதிர்க்கட்சியினரே! ரில்வின் சில்வா

0

அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ஆகக்கூடுதலான பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களே தற்போதைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா விமர்சித்துள்ளார்.

ஹட்டன், டிக்கோயா பிரதேசத்தில் நேற்று (26) உரையாற்றும் ​போது ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதி

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருபோதும் பொய்யுரைத்தது கிடையாது.

அதே​போல கடந்த காலங்களில் நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இப்போது படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.

முன்னைய காலங்களில் பல்வேறு ஊழல், மோசடிகளை மேற்கொண்டவர்கள் இன்று பல்வேறு கட்சிகளுக்கு மாறி தங்கள் ஊழல்களை மறைத்துக் கொண்டு மீண்டுமொரு தடவை வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேசம் போட்டுள்ளனர்.

அவர்களை பொதுமக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்றும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version