Home இலங்கை அரசியல் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பேரணி : கொழும்பில் முக்கிய சந்திப்பு

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பேரணி : கொழும்பில் முக்கிய சந்திப்பு

0

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்த
திட்டமிட்டுள்ள எதிர்ப்பு பேரணி குறித்த கலந்துரையாடல் நேற்று(12) இரவு
இடம்பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத் தலைவர்களிடையே,
இந்த சந்திப்பு நடைபெற்றது.

 முக்கிய சந்திப்பு

எதிர்க்கட்சிகள் நடத்தும் முக்கிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படும் இந்த பேரணிக்கான நோக்கங்கள், ஒருங்கிணைப்பு மற்றும்
எதிர்பார்க்கப்படும் பொதுமக்கள் பங்கேற்பு குறித்து இந்த சந்திப்பு கவனம்
செலுத்தியது.

இந்த சந்திப்பில், உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம், ராஜித
சேனாரத்ன, பிரேமநாத் ஸ்ரீ தொலவத்த மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள்
பலர் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version