முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவுடன், அவரது விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
எதிர்க்கட்சிகள் தீர்மானம்
இந்நிலையில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அதற்கான பொது இணக்கப்பாட்டு வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
