Home இலங்கை அரசியல் 53 உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி! திஸ்ஸ அத்தநாயக்க பெருமிதம்

53 உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி! திஸ்ஸ அத்தநாயக்க பெருமிதம்

0

நாட்டில் உள்ள 95 உள்ளூராட்சி மன்றங்களில் 53 உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டை, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி பெற்றுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மன்றங்களில், எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லை. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடையே தேர்தல்கள் நடத்தப்பட்டு, அதிகாரங்கள் கையேற்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை

குறித்த 53 சபைகளில் 22 இல், ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவுகளால் அரசாங்கம் அமைதியற்றதாக மாறி, எதிர்க்கட்சியின் வெற்றிக்கு பதிலளிக்கும் விதமாக தேர்தல் செயல்முறையை மாற்ற முயற்சிப்பதாக அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version