இலங்கையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு
குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் பொதுமக்களின் கருத்தைக் கோரியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான விவாதம் 2025 பெப்ரவரி 18 முதல் மார்ச் 21ஆம் திகதி வரை
நடைபெறும்.
இந்தக் காலகட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிதியாண்டிற்கான
அரசாங்கத்தின் திட்டங்களை முழுமையாக ஆராய்ந்து விவாதிப்பார்கள்.
பாதீடு
இந்தநிலையில், விவாதத்தை விரிவுபடுத்தவும், பொதுமக்களின் குரல்களுக்கு பதிலை
உறுதி செய்யவும், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு குறித்த தங்கள் கருத்துக்களைப்
பகிர்ந்து கொள்ளுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், பொதுமக்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளது.
இது, பாதீட்டு விவாத செயல்பாட்டில் ஒரு முக்கியமான படியாகும், குறிப்பாக
அரசாங்கம் பொதுக் கருத்துக் கணிப்பு நடத்தாததால். நமது நாட்டின் எதிர்காலத்தை
வடிவமைப்பதில் பொதுமக்களின் கருத்து விலைமதிப்பற்றது என்று எதிர்க்கட்சித்
தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பும் முறைகள்
அஞ்சல் மூலம்:-
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்,
இலங்கை நாடாளுமன்றம்,
ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டே என்று முகவரிக்கு அனுப்பலாம்,
(தயவுசெய்து உறையின் இடது பக்கத்தில் “பட்ஜெட் விவாதம் குறித்த உங்கள்
கருத்துகள்” என்று குறிப்பிடவும்)
வட்ஸ்அப்: 0094 75 9570 570
மின்னஞ்சல்: connect@oloparliament.gov.lk
இணையப் படிவம்: https://forms.gle/2RmAtJE3ASXPdfHg8,yq;if /Ngd;
இதேவேளை பொதுமக்கள் 2025 பெப்ரவரி 10ஆம் திகதிக்கு முன் தங்கள் கருத்துக்களைச்
சமர்ப்பித்து, விரிவான மற்றும் உள்ளடக்கிய பாதீட்டு விவாதத்தை உறுதி செய்ய
உதவுமாறு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் கேட்டுள்ளது.
