Home இலங்கை அரசியல் ரணிலின் கைதுக்கு எதிராக அதிரடியாக ஒன்று கூடிய எதிர் கட்சிகள்

ரணிலின் கைதுக்கு எதிராக அதிரடியாக ஒன்று கூடிய எதிர் கட்சிகள்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைதை கண்டித்து எதிர்க்கட்சியினர் ஊடக சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பானது இன்று (24) கொழும்பில் (Colombo) இடம்பெற்று வருகின்றது.

அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தைத் தோற்கடிப்போம் என்ற தொனியில் குறித்த ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து, உடல் நல குறைவால் நள்ளிரவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பின்பு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   

NO COMMENTS

Exit mobile version