Home முக்கியச் செய்திகள் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்கு: நீதிமன்றின் உத்தரவு!

ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்கு: நீதிமன்றின் உத்தரவு!

0

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற மூத்த டிஐஜியுமான ரவி செனவிரத்னவுக்கு எதிராக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான மனு விசாரணை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மதுபோதையில் வாகனம் ஓட்டி வீதி விபத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ரவி செனவிரத்ன மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மனு பரிசீலனை

அதன்படி, ரவி செனவிரத்ன தனக்கு எதிரான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் அமர்வு மனுவை பரிசீலித்த பின்னர் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version