Home இலங்கை அரசியல் மகிந்தவை நேரில் சந்தித்த அநுர தரப்பு உறுப்பினர்

மகிந்தவை நேரில் சந்தித்த அநுர தரப்பு உறுப்பினர்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையே ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பேருவளையில் உள்ள மொரகொல்ல ஸ்ரீ புத்தசிறி மகா விஹாரையில் புதிதாக கட்டப்பட்ட சங்கஸ்ஸபுர ஸ்ரீ சம்புத்தராஜ மகா விஹாரையின் திறப்பு விழாவின் போது இந்த சந்திப்பு சமீபத்தில் இடம்பெற்றறுள்ளது.

மகிந்த ராஜபக்ச விழாவிற்கு வந்தபோது, ​​அவரை அங்கு இருந்த ரோஹித அபேகுணவர்தன, பியால் நிஷாந்த, ஜகத் விதான மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோர் வரவேற்றனர்.

கவனத்தை ஈர்த்த உரையாடல்

இதன்போது மகிந்தவை பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்? , நலமா?” என சந்திம ஹெட்டியாராச்சி நலன் விசாரித்ததாக கூறியுள்ளார்.

இதன்போது, “பிரச்சனை இல்லை” என்று மகிந்த பதிலளித்ததாக கூறியுள்ளார்.

“ஐயா, இந்த நிகழ்வுக்கு நீங்கள் தங்காலையில் இருந்து வந்தீர்களா?” சந்திம மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த உரையாடல் மிகவும் நெருக்கமாக, கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்ததாகவும், இதனால் அந்த இடத்தில் இருந்த பலரின் கவனத்தை ஈர்த்ததாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version