Home இலங்கை சமூகம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10,000 க்கும்
மேற்பட்ட காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் மீண்டும்
தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்திற்கு புதிய
வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதுடன் 375
மில்லியன் ரூபா ஒதுக்கீட்டை மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வழிமுறைகள் 

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று (29)
காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றியபோது
அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் குற்றம் என்றும், தேசிய மக்கள் சக்தி
தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் அரசாங்கக் கொள்கையில் உண்மை, நீதி மற்றும்
இழப்பீடுகள் மையமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்படும், பாரபட்சமற்ற நீதியை உறுதி
செய்வதற்கான ஒரு புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும், மற்றும்
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க ஒரு விரிவான இழப்பீட்டு முறை
செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார மேலும் கூறினார். 

NO COMMENTS

Exit mobile version