Home இலங்கை அரசியல் அமெரிக்க குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழ்தலைவர்கள்

அமெரிக்க குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழ்தலைவர்கள்

0

ஆட்சி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உறவுகளை வளர்ப்பதற்கான
வழிகளை ஆராய்வதற்காக அமெரிக்காவிலிருந்து இரு தரப்பு காங்கிரஸ்
உறுப்பினர்களையும் கொண்ட் அலுவலர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

குறித்த குழு இலங்கை அரசத் தரப்பு உட்பட பலதரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி
வருகின்றது.

கலந்துரையாடல்

இந்தக் குழுவினர் இன்று தமிழ் பேசும் மக்களின் நேற்று(29) தலைவர்களைக் கொழும்பில்
சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
ஆகியோருடனேயே அந்தக் குழுவினர் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version