Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டில் தீவிரப்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டில் தீவிரப்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்!

0

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.

மேலும், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஒன்று கூடல்களை நடத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

விசேட பாதுகாப்பு 

இதேவேளை, தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரச்சார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதைாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version