Home முக்கியச் செய்திகள் தொடர் தோல்விகள் : பாகிஸ்தான் கிரிக்கெட்சபை எடுத்துள்ள கடினமான முடிவு

தொடர் தோல்விகள் : பாகிஸ்தான் கிரிக்கெட்சபை எடுத்துள்ள கடினமான முடிவு

0

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர்ச்சியான தோல்விகளை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, 2025-2026 ஆம் ஆண்டுக்கான எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிரேட் A ஒப்பந்தங்களை வழங்குவதில்லை என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான்

கடந்த ஆண்டு, பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் கிரேட் ஏ ஒப்பந்தங்களை வைத்திருந்தனர், ஆனால் இந்த ஆண்டு அவர்கள் இருவரும் கிரேட் பி ஆக தரமிறக்கப்பட்டுள்ளனர்.

 மேலும், கடந்த ஆண்டு பி பிரிவு ஒப்பந்தத்தில் இருந்த பாகிஸ்தான் டெஸ்ட் அணித்தலைவர் ஷான் மசூத், டி பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் சட்டப் பிரச்சினை காரணமாக சுமார் 8 ஆண்டுகள் தனது மத்திய ஒப்பந்தத்தை இழந்த ஃபகார் ஜமானுக்கு இந்த ஆண்டு பி பிரிவு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version