இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கையை பாகிஸ்தானின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (NDMA) தொடங்கியுள்ளது, இதன்படி உடனடியாக நிவாரண உதவி மற்றும் மீட்புக் குழுவை அனுப்பியுள்ளது.
மீட்புப் படகுகள்(rescue boats) உயிர் காக்கும் கவச அங்கிகள்(life jackets) மற்றும் நீர் நீக்கும் பம்புகள்(dewatering pumps) போன்ற முக்கிய பொருட்கள் இந்த தொகுப்பில் அடங்கும்.
நடமாடும் மருத்துவமனை
உடனடி மருத்துவ சேவையை வழங்க ஒரு நடமாடும் மருத்துவமனையும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலதிகமாக, சர்வதேச கடற்படை மதிப்பாய்வு-25 க்காக கொழும்பிற்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் SAIF, மனிதாபிமான நிவாரணப் பொருட்களை வழங்கியது.
இந்த தேசிய பேரிடர் மீட்புக்காக கடற்படை உதவியில் உணவு, அவசரகால மருந்துகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் அடங்கும்.
Thank You Pakistan 🇵🇰🇱🇰
Pakistan’s Ship PNS SAIF, currently docked at Colombo Port, has handed over donations and relief supplies for flood victims affected by Cyclonic Storm Ditwah.
The items were officially handed over through the Sri Lankan Navy, reaffirming Pakistan’s… pic.twitter.com/uvLd1jc4t6— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) November 29, 2025
