Home இலங்கை அரசியல் சஜித் ஜனாதிபதியாகியிருந்தால் இது நடந்திருக்கும்..! தலவாக்கலையில் திகாம்பரம்

சஜித் ஜனாதிபதியாகியிருந்தால் இது நடந்திருக்கும்..! தலவாக்கலையில் திகாம்பரம்

0

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலையில் இன்று (01.05.2025) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இணைந்து நடத்திய மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

உண்மையை சொல்லி வாக்கு கேட்ட சஜித்

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது உண்மையை சொல்லியே சஜித் வாக்கு கேட்டார்.

பொய்களை கூறியே அநுர வாக்கு கேட்டார். இறுதியில் பொய்தான் வென்றது. எனினும், இன்னும் ஒரு வருடத்தில் இந்த அரசாங்கம் ஆட்டம் காணும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. அத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற வைக்கவும் என கோரியுள்ளார்.

அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் ஜனாதிபதியாகி இருந்தால் மலையக மக்கள் வாழ்வில் மாற்றம் வந்திருக்கும். எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் தொடர்பில் அநுர கூறிய விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version