பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக உள்ளது.
இப்போது கதையில் 1000 பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்று பெரியவர்களின் சொல்லிற்கு இணங்க மயிலை பல பொய் கூறி திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.
ஆனால் மயில் குறித்த உண்மை பாண்டியனுக்கு தெரிய வந்ததும் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
இன்றைய எபிசோட்
இன்று நடந்த எபிசோடில், மயிலின் அம்மா வழக்கம் போல் நடந்த விஷயங்களை வெளியே கூறாமல் பொய்யாக கூறி வேடிக்கை பார்த்தவர்களிடம் நியாயம் கேட்கிறார்.
உடனே சக்திவேல் மயில் அம்மாவிடம் வரதட்சணை கொடுமை கூறி புகார் கொடுங்கள் என கூறுகிறார். கோபத்தில் பாண்டியன், சக்திவேலை அனைவரின் முன்பும் எட்டி உதைக்கிறார், இதனால் இருவீட்டாரும் அடித்துக்கொள்கிறார்கள்.
பின் குழலி, மயில் மறைத்த உண்மைகளை அனைவரிடமும் கூறி இப்படி உங்கள் வீட்டில் நடந்தால் சும்மா இருப்பீர்களா என கேட்கிறார். இன்றைய எபிசோட் சில அடிதடிகளுடன் அப்படியே முடிவுக்கு வருகிறது.
