Home சினிமா வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு… பாண்டியன் ஸ்டோர்ஸ்...

வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கியமான கதைக்களம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒன்று பழனிவேல் அவரது அண்ணன்கள் வைத்துக் கொடுக்கும் புதிய மளிகை கடையை திறக்கும் விஷயத்தை பாண்டியன்-கோமதியிடம் கேட்க அவர்கள் சந்தோஷமாக வாழ்த்துகிறார்கள்.

ஆனால் பாண்டியன் நான் எதுவும் செய்யவில்லை, உனக்கு திருமணம் ஆனதுமே இந்த விஷயத்தை செய்திருக்க வேண்டும் என பழனிவேலுவிடம் கூறி புலம்புகிறார். அடுத்து சரவணன், மயில் ஆதார் கார்ட்டு வாங்க மிகவும் போராடி வருகிறார்.

இன்றைய எபிசோட்

இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடில், சரவணனுக்கு மயிலின் ஆதார் கார்டு கிடைக்கிறது.

மயிலின் அப்பாவிடம் பேசி அவரிடம் இருந்து கார்டு வாங்கி பார்க்கிறார், அதில் மயில் அவரை விட 2 வயது அதிகமானவர் என்பதை தெரிந்து கொள்கிறார்.

கோபத்தில் சரவணன், மயிலை தனியாக அழைத்துச் சென்று இப்படி எல்லா விஷயத்திலும் பொய் சொல்லியிருக்கிறாரே சீ இதெல்லாம் ஒரு பொலப்பா என கோபமாக திட்டுகிறார். இதோடு என்னால் முடியாது, எல்லா உண்மையையும் வீட்டில் கூறப்போகிறேன் என்கிறார் சரவணன்.

மயிலோ வீட்டில் உண்மை தெரிந்தால் கஷ்டம், இதை சொல்ல வேண்டாம் என காலில் விழுந்து கதறுகிறார்.

ஆனால் சரவணன் இன்று உன் கதை முடிந்தது ஒழுங்காக வா என்கிறார். அடுத்து எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்த வார எபிசோடில் காண்போம்.

NO COMMENTS

Exit mobile version