Home சினிமா நான் என் பெயருக்கு பின் துராடி என பெயர் வைத்ததற்கு அதுதான் காரணம், நான் தமிழச்சி.....

நான் என் பெயருக்கு பின் துராடி என பெயர் வைத்ததற்கு அதுதான் காரணம், நான் தமிழச்சி.. சீரியல் நடிகை சரண்யா ஓபன் டாக்

0

சரண்யா துராடி

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின் சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை சரண்யா துராடி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவருக்கு முதல் சீரியலே நல்ல ரீச் கொடுத்தது.

பின் விஜய்யில் ஆயுத எழுத்து, சன் டிவியில் ரன் என நடித்து வந்தவர் இப்போது மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… யாரு பாருங்க, போட்டோ இதோ

ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் திட்டி வர இப்போது புரிந்துகொண்டார்கள்.

நடிகை பளீச்

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சீரியல் நடிகை சரண்யா துராடி பேசும்போது, என்னை பலரும் நான் பிற மாநிலத்தவர் என்று கூறி வருகிறார்கள், ஆனால் நான் பக்கா தமிழச்சி.

என்னுடைய அப்பாவின் சொந்த ஊர் பாண்டிச்சேரி, என்னுடைய அம்மா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
என்னுடைய பெயருக்கு பின்னாடி இருக்கும் “துராடி” என்ற பெயர் ஊரில் வணங்கப்படும் சிறு தெய்வத்தின் பெயர்.

தமிழை பேசுவதற்கு தமிழச்சியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று இல்லை, ஆனால் நான் தமிழச்சி தான் என கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version