பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் தற்போது தங்கமயில் பற்றிய அனைத்து உண்மைகளையும் மொத்த குடும்பத்திடம் கூறிவிட்டார்.
தங்கமயில் எப்படி எல்லாம் ஆரம்பத்தில் இருந்து பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்பதை அவர் ஒவ்வொன்றாக சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
வீட்டை விட்டு செல்லும் மயில்?
பொய் சொன்னது எல்லாவற்றையும் ஒப்புக்கொண்ட தங்கமயில் தான் குழந்தை விஷயத்தில் மட்டும் பொய் சொல்லவில்லை என கூறுகிறார்.
ஒருகட்டத்தில் மொத்த குடும்பமும் சரவணனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்க மயில் சைலண்டாக ஒதுங்கி செல்கிறார். அவர் வீட்டை விட்டு சென்றுவிடுவாரா அல்லது அங்கேயே இருந்து பிரச்னையை சமாளிக்க போகிறாரா என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
