Home ஏனையவை ஆன்மீகம் நுவரெலியாவின் ஸ்ரீ கதிரேஷன் சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர இரதோற்சவ பெருவிழா

நுவரெலியாவின் ஸ்ரீ கதிரேஷன் சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர இரதோற்சவ பெருவிழா

0

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியோரத்தில் வீற்றிருக்கும் கெலேகால அருள்மிகு ஸ்ரீ
கதிரேஷன் சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர இரதோற்சவ பெருவிழா, பக்தி பூர்வமாக இன்று வியாழக்கிழமை(10) இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் 2025ஆம் ஆண்டுக்காக வருடாந்த பங்குனி உத்திர முத்தேர் தேர் திருவிழா
கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதனையடுத்து, 09ஆம் திகதி புதன்கிழமை பால்குடம் பவனி மற்றும் பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்குதல் என்பன இடம்பெற்றன.

இரதோற்சவம் 

அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம்(10) ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று
வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு
சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மேள தாள வாத்தியங்கள் முழங்க மூன்று
மூர்த்திகளும் உள்வீதி வலம் வந்து பிரதான வீதிகள் ஊடாக நுவரெலியா நகரில் வெளி
வீதி எழுந்தருளி தனித்தனி தேரில் ஏறி முத்தேர் பவனியாக இரதோற்சவம் இடம்பெற்றது.

NO COMMENTS

Exit mobile version