சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரம் நடைபெறும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அறிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
