Home இலங்கை அரசியல் தயாசிறி ஜெயசேகரவின் நடத்தை தொடர்பில் விசாரிக்க விசேட குழு

தயாசிறி ஜெயசேகரவின் நடத்தை தொடர்பில் விசாரிக்க விசேட குழு

0

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

இன்று (23.05.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

விசாரணை குழு 

இதற்கமைய, குறித்த குழுவிற்கு குழுக்களின் துணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகர தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலேக ஆகியோர் குழுவின் மீதமுள்ள உறுப்பினர்களாக உள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

“எனக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மே 20ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நடந்து கொண்ட விதம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணி இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது ” என்று சபாநாயகர் மேலும் கூறினார். 

NO COMMENTS

Exit mobile version