Home முக்கியச் செய்திகள் சற்றுமுன் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை

சற்றுமுன் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை

0

புதிய இணைப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

10ஆவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக நிசாம் காரியப்பர்(Nizam Kariapper) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

பத்தாவது நாடாளுமன்றத்தின் இன்றைய (18) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

https://www.youtube.com/embed/h58JqhR6z2g

NO COMMENTS

Exit mobile version