Home முக்கியச் செய்திகள் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு: சற்றுமுன் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை

எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு: சற்றுமுன் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை

0

புதிய இணைப்பு

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிப்பதற்கு சபாநாயகர் இன்று (17) நேரம் ஒதுக்க மறுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இந்த விடயத்தினைத் தெரிவித்தார்

முதலாம் இணைப்பு 

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய (16.06.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை11.30 முதல் மாலை 5.00 வரை விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/a7n9iqou4Vs

NO COMMENTS

Exit mobile version