நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வர்த்தமானி அறிவிப்பு
இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
