Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தெரிவின் பின்னர் நாடாளுமன்றம் கூடுமென அறிவிப்பு

ஜனாதிபதி தெரிவின் பின்னர் நாடாளுமன்றம் கூடுமென அறிவிப்பு

0

ஜனாதிபதி தெரிவின் பின்னர் நாடாளுமன்றம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் காலை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தெரிவு

இந்த மாதம் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடிய நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றை கூட்ட முடியும் எனவும் அவ்வாறு நாடாளுமன்றை கூட்டுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version