Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் விவாதத்துக்கு வரவுள்ள இரு வர்த்தமானி அறிவித்தல்கள்

நாடாளுமன்றில் விவாதத்துக்கு வரவுள்ள இரு வர்த்தமானி அறிவித்தல்கள்

0

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இரு வர்த்தமானி அறிவித்தல்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி மாத்திரம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஆகஸ்ட் 21 ஆம் திகதி மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

அதனையடுத்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2366/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2387/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version