ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளையதினம் அனைத்துக் கட்சித் தலைவர்களது கூட்டம் நடைபெறவுள்ளது.
அமெரிக்க வரிகளின் தாக்கம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்திக்க கோரிக்கை
இதன்படி, நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியை சந்திக்க இன்றையதினம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
