Home இலங்கை சமூகம் இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

0

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பீ.ஏ.சந்தரபால தெரிவிக்கையில்,

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறுகையில், வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை மீறி செயற்படும் சாரதிகள், பயணிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸார் மற்றும் அதிவேக வீதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

திட்டத்தின் நோக்கம்

அத்துடன் ஆசனப்பட்டி அணிவதால் விபத்து, காயங்களை சுமார் 45 வீதம் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கூறியுள்ளார்.

மேலும் பொதுமக்களைப் பாதுகாப்பான போக்குவரத்திற்குப் படிப்படியாகப் பழக்கப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version