Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிர் மாய்ப்பேன் – முன்னாள் எம்.பி பகிரங்கம்

நாடாளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிர் மாய்ப்பேன் – முன்னாள் எம்.பி பகிரங்கம்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக் கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க (Nandana Gunathilaka) தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளம் ஒன்றில் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எனது நாடாளுமன்ற ஓய்வூதியத்திலிருந்து கிடைக்கும் ரூ.68,000.00-ஐக் கொண்டு வாழ்க்கையை நடத்தவே நான் சிரமப்படுகிறேன்.

உறுப்பினர்களின் ஓய்வூதியம்

வாடகை, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் மற்றும் மருந்துகளுக்கு பணம் செலுத்திய பிறகு, உணவு மற்றும் பிற தற்செயலான செலவுகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.700.00 – 800.00 மட்டுமே என்னிடம் உள்ளது.

என்னைப் போலவே, ஜே.வி.பி, ஐ.தே.க., மற்றும் தமிழ் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர்” என தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள பதிவில் காண்க…

NO COMMENTS

Exit mobile version