Home இலங்கை சமூகம் கடற்போக்குவரத்து தடைக்கு பின் நெடுந்தீவைச் சென்றடைந்த பயணிகள்

கடற்போக்குவரத்து தடைக்கு பின் நெடுந்தீவைச் சென்றடைந்த பயணிகள்

0

யாழ். (Jaffna) நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து நேற்று தடைப்பட்டிருந்த நிலையில் குறிகாட்டுவானில் இருந்து பயணிகள் குமுதினிப்படகு மூலம் இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.

நேற்று (02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து
புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. 

மாற்று படகு சேவை

இந்நிலையில், திருத்த வேலைகளுக்கு பின்னர் பயணம் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் உடனடியாக மாற்று படகு சேவையும் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, திருத்தவேலை பயனளிக்காத நிலையில் வடதாரகை சேவை நிறுத்தப்படுவதாக
தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு
வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் காரணமாக, மாலை முதல் துறைமுகப் பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்,
நோயாளர்கள் என சுமார் 60 பேர் வரையில் காத்திருந்து பயணத்தினை தொடர்ந்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version